Monday, March 21, 2011

எனது நிலைப்பாடும்
கொள்கையும்
எனது விருப்பத்திற்கேற்ப அமைத்து விடுகிறேன்.

சாலையில் குடல் சிதறிய
நாயையோ பூனையையோ
பார்க்கும் போது வரும் பரிதாபம்
கையில் கிடக்கும்
வறுத்த கோழியிடம் ஏற்படுவதில்லை.

எனது நிலைப்பாடும்
கொள்கையும்
எனது விருப்பத்திற்கேற்ப அமைத்து விடுகிறேன்.

----------------------------------------------------------------------------------

" எப்படி முன் பார்த்தது போலவே மாறாமல் இருக்கிறாய் " ?
என்று கேட்டான் நண்பன்.
" மாற்றங்களால் " என்றேன் நான்.

----------------------------------------------------------------------------------

மேகம்
-------------

நீரில் தொடங்கியது
என் வாழ்க்கைப் பயணம்.
றுற்கார்திஎ என்னைத் தமாடுற வைத்தது.
தென்றல்
புயல்
வெப்பம்
குளிர்
அனைத்து நிலைகளிலும்
முட்டிமோதி
மூழ்கி திளைத்து
மலையோடு பின்னிப் பிணைந்து
மரங்கள் ஊடே நெளிந்து வளைந்து
க ளை த் து
கலந்தேன்
மண்ணை.
ஒன்றையும் கொண்டு செல்லாமல் .
ஒன்றையும் விட்டு செல்லாமல்.

----------------------------------------------------------------------------------


குஜராத் கலவரம் என்றான்
இங்கு போராட்டம் நடத்தினேன்
மகாராஷ்டிரா பூகம்பம் என்றான்
இங்கு நிதி திரட்டி அனுப்பினேன்
ஒரிசா வெள்ளம் என்றான்
இங்கு உணவுப்பொட்டலங்கள் தயார் செய்து வாரி வழங்கினேன்
இங்கு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்றேன்
அங்கு ஒரு சலனம் கூட இல்லையே ?
இதுதான்
ஒற்றுமையில் வேற்றுமையோ ?

------------------------------------------------------------------------------------------

பெட்டிக்கடையின் வெளியில்
பற்ற வைத்துக் கொண்டிருந்தேன் வென்குழலை
வேகமாக வந்தார் அந்த முதியவர் -
" ஒரு ரூபா கொடு " - கெஞ்சாமல்
கூழைக் கும்பிடு போடாமல்
உரிமையோடு கேட்டு கை நீட்டினார் .
இதற்கு முன் அவரைப் பார்த்ததில்லை
இனி பார்ப்பேனா என்று தெரியவில்லை
ஒன்றும் பேசாமல் ஒரு ரூபாயை
எடுத்துக் கொடுத்தேன் .
ஒரு வேளை கனவில் கடன் வாங்கி இருப்பேனோ ?

------------------------------------------------------------------------------------------

மனைவியிடம் " இன்னும் குழந்தையாகவே இருக்கிறாய் " என்று கோபத்துடன் கத்தினேன்.
" அதில் தவறு ஏதும் இருக்கிறதா? " என்று கேட்டாள்.
யோசிக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------

வெற்றி பெறும்போது
என்னை விட
என் மகன்
அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
தோல்வி அடையும்போது
என்னை அவன்
தேற்றுகிறான்.
புரியவில்லை
யாருக்கு யார் அப்பா என்று ?

கருணாநிதியின் தேர்தல் அறிக்கை


கருணாநிதியின் தேர்தல் அறிக்கைக்கு என் பின்னூட்டம்

தாய்மார்களுக்கு, அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப, இலவசமாக கிரைண்டரோ அல்லது மிக்சியோ வழங்கப்படும்.

நா சா :

அப்போ கிரைண்டர் அல்லது மிக்சி நிறுவனத்தோடு டீல் முடிந்ததுன்னு சொல்லுங்க. DVD , AC நிறுவனம் எதுவும் செட் ஆகலிங்களா அய்யா ?


குடும்பத்தின் முதல் பட்டதாரிக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்கப்படும்.

நா சா :

அப்போ பத்து வருடம் முன்பு ஏற்கனவே பதிவு செஞ்சவன் நாக்கு வழிக்கவா ? முதலில் அவனுக்கு முன்னுரிமை கொடுங்கள். பிறகு பார்க்கலாம்.

* மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கான கடனுதவி, ரூ.4 லட்சமாக உயர்த்தப்படும். அதில், ரூ.2 லட்சம் கடன், மானியமாக வழங்கப்படும்.

நா சா :

மகளிர் என்றால் கனி , தயா , ராசத் இவங்க இல்லையே

அரசு கல்லூரிகளில் பிற்படுத்தப்பட்ட, ஆதிதிராவிடர் மாணவர்களுக்கு இலவச லேப்-டாப் வழங்கப்படும்.

நா சா :

இதை ஜாதி வாரியாக கொடுக்காமல் பொருளாதார அடிப்படையில் கொடுக்கலாமே

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் 3 இலவச சீருடைகள் வழங்கப்படும்.

நா சா :

ஜட்டி , பனியனும் சேர்த்து தந்தால் கோடி புண்ணியம்

* 2006-ம் ஆண்டு முதல் 2009-ம் ஆண்டுவரை பெறப்பட்ட கல்விக் கடனுக்கான வட்டியை அரசே செலுத்த பரிசீலிக்கப்படும்.

நா சா :

ஏற்கனவே ஒரு லட்சம் கோடி கடன் இருக்கு. இந்த லட்சணத்தில இதை எப்படி எடுத்துக் கொள்வது ? ஜோக் ஆகவா ?


முதியோர், ஆதரவற்ற பெண்களுக்கான உதவித்தொகை ரூ.750 ஆக உயர்த்தப்படும்.

நா சா :

அதுல எதுவும் இந்த இடைத் தரகர்கள் பிடுங்கி விட மாட்டங்களே ?


சென்னை-கோவை இடையே புல்லட் ரெயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். மதுரை, கோவையிலும் மெட்ரோ ரெயில் சேவை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். சென்னை மெட்ரோ ரெயில் போக்குவரத்து, மாமல்லபுரம்வரை நீட்டிக்கப்படும்.

நா சா :

அய்யா . கனவு கண்டது போதும். எழுந்திரிங்க. சென்னை மெட்ரோ திட்டத்திற்கே 15000 கோடி மேல் செலவு ஆகும். அதுக்கே ஜப்பான் கிட்ட கடன் வாங்கி செய்றோம். இதுல மதுரை, கோவை எல்லாம் 2050 இல் தான் மெட்ரோ திட்டம் அமல் படுத்தப்படும். சும்மா லுல்லுல்லாய் பண்ணாதீங்க


* போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வுகாண, சென்னை அருகே புதிய துணை நகரம் அமைக்கப்படும்.

நா சா :

அந்த துணை நகரம் உங்க வாரிசுகள் வாங்கி குவித்து இருக்கும் இடங்களில் தானே அமையும்.


சென்னை அருகே குறைந்த வாடகை கொண்ட வீடுகள் கட்டித் தரப்படும்.

நா சா :

அதை நாங்கள் சில்மா , தய , ஸ்டால் , அழகு போன்ற ஏழைகளுக்கு இலவசமாக கொடுப்போம்.

நடமாட முடியாத முதியோருக்கு மாதத்தில் ஒருநாள் அரசு மருத்துவர்கள் வீடு தேடிச் சென்று சிகிச்சை அளிப்பார்கள்.

நா சா :

- அவங்கள government hospital க்கு ஒழுங்கா வரச் சொல்லுங்க போதும். வேலை நேரத்திற்கு இருந்து பணி செஞ்சாலே பெரிய விஷயம்.


சென்னை, தாம்பரம் போல, மதுரையிலும் காசநோய் மருத்துவமனை அமைக்கப்படும். தனியார் மருத்துவமனைகளில் கட்டணங்களை ஒழுங்குபடுத்த அரசு சார்பில் மருத்துவ கட்டண ஒழுங்குமுறை ஆணையம் அமைக்கப்படும்.

நா சா :-

சும்மா கலாயிகாதீங்க. தனியார் மருத்துவமனை கட்டணம் ஒழுங்கு என்பதெல்லாம் சும்மா விஜயகாந்த் வீர வசனம் என்று எங்களுக்கு தெரியும்.


அனைத்து மாவட்டங்களிலும் பல்கலைக்கழகங்கள் அமைக்கப்படும். அனைத்து மாவட்டங்களிலும் அரசு பொறியியல் கல்லூரிகள், செவிலியர் கல்லூரிகள் அமைக்கப்படும்.

நா சா :-

அதனை எங்கள் MLA மற்றும் மந்திரிகளே அனுமதி பெற்று நடத்துவார்கள் .


ஈழத்தமிழர்கள் அமைதியாக வாழ இலங்கை அரசை வற்புறுத்துவோம்.

நா சா :

ஏற்கனவே ஒரு லட்சம் கடிதங்கள் எழுதி இருக்கிறேன். இன்னும் பல லட்சம் கடிதங்கள் எழுதி உலக சாதனை புரிவேன்.

திருச்சி, மதுரையில் மனநல மருத்துவமனைகள் தொடங்கப்படும்.

நா சா :-

உங்க ஆட்சி தொடர்ந்தால் கட்டாயம் இது தேவைதான்.


* கல்வியை மாநில அரசு பட்டியலில் கொண்டுவர வலியுறுத்தப்படும். தரமான இலவச கல்வி அளிக்க அரசு பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும்.

நா சா :

சும்மா புரு புரா .


தடையின்றி மின்சாரம் கிடைக்க மின்உற்பத்தி திட்டங்கள் அதிகரிக்கப்படும்.

நா சா :-

இருக்கிற மின் நிலையங்கள் ஒழுங்காக இழப்பில்லாமல் மின் உற்பத்தி செய்தாலே போதுமானது

* விவசாய நிலங்கள், வீட்டு மனைகளாக மாற்றுவது தடுக்கப்படும்.

நா சா : -

அதிமுக வினருக்கு மட்டும்.


வைகோ அரசியலில் வெல்ல பத்து வழிகள்
1. ஈழத் தமிழருக்காக உண்மையாகவே போராடுவது போல் நடிப்பது .

2. தன் மகனை கட்சியின் துணை பொதுச் செயலாளர் / மத்திய மந்திரி
(ராஜ்யசபா சீட் மூலம் ) ஆக்குவது .

3. பதவிக்காக மட்டும் டெல்லிக்கு போவது.

4. தனக்கு தானே வாரத்திற்கு இரண்டு பாராட்டு விழா நடத்துவது

5. கைது செய்யும் போது " அய்யோ கொல்றாங்களே . கொல்றாங்களே " என்று
கத்துவது

6. நாத்திகம் பேசிக் கொண்டே மஞ்சள் துண்டு போடுவது , ஜோசியர் சொன்ன
நேரத்தில் வேட்பாளர் பட்டியல் வெளியிடுவது .

7. ராஜபக்ஷேவுடன் கூடி இலங்கையில் தொழில் புரிவது .

8. பேரன் பதவிக்காக டெல்லி போவது.மீனவர் செத்தால் கடிதம் மட்டுமே
போடுவது இப்படி இரட்டை வேடம் போடுவது

9. மத்திய அரசு திட்டத்தை தன் திட்டம் என்று சொல்லி ஏமாற்றுவது

10௦. இலவசமாக எல்லாம் கொடுத்து மக்களை சோம்பேறிகள் ஆக்குவது

Sunday, March 20, 2011

புவி வெப்பமாதலின் விளைவு


சென்னை எண்ணூர் பகுதியில் மெல்ல மெல்ல கடல் அரித்துக் கொண்டே வருகிறது . நான் கடந்த 8 வருடங்களாக பார்த்துக் கொண்டு இருக்கிறேன். கிட்டத்தட்ட 20 முதல் 30 mtr வரை நர்ருக்குள் வந்து இருக்கிறது. பெரிய பாறைகள் போடப்பட்டும் மெல்ல நுழைவதை தடுக்க முடியவில்லை. புவி வெப்பமாதலின் விளைவுகளை இங்கு பார்க்க முடிகிறது. .

இப்படியே மெல்ல மெல்ல ஊருக்குள் வருவதால் இந்த பகுதிகளில் கரையோரத்தில் குடிசைகளில் வாழும் விளிம்பு நிலை மீனவர்கள் வேறு புலம் தேடி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.