Monday, May 16, 2011

விருப்பம்

" என்னவாக விருப்பம் ?"
என்ற டீச்சரின் கேள்விக்கு
" எஞ்சினியர் , டாக்டர் , போலீஸ் " என்று
எதைச் சொல்வது என்று
குழப்பமாக சிந்திக்கும் தருணம்
வரவில்லை -
சிக்னலில் பிச்சை எடுக்கும்
சிறுவனுக்கு.

----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------

ஒரு தருணத்தை கூட தவற விட்டால் தான் விரும்பிய வடிவத்தை வாசகரோடு பகிர முடியாமல் போகின்ற புகைப்பட கலைஞரை எண்ணி மனம் வருந்துகிறது.
தான் சொல்ல வந்த விஷயத்தை எளிமையாகவும் ஆழமாகவும் ஒரு எழுத்தாளரை விடவும் ஒரு கவிஞரை விடவும் சொல்லும் புகைப்பட கலைஞருக்கு ஏன் இந்த திரை மூடல் ?


----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------


ஒரு அரசியல் நிகழ்ச்சிக்கு
ஒரு திரைப்படத்திற்கு
ஒரு ஆன்மீக பிரசாரத்திற்கு
ஒரு இன மத பிரச்னைகளுக்கு
ஒன்று சேராத மக்கள்
ஒரு விளையாட்டிற்காக ஒன்று
சேர்வதற்காக மகிழ்ச்சி அடைகிறேன்.
என்ன
ஒரு விஞ்ஞானியின் அறிவியல் நிகழ்ச்சிக்காக
ஒரு எழுத்தாளனின் கவிஞனின் விழாவிற்காக
ஒன்று சேர்ந்தால் இன்னும் மகிழ்வேன்.

Monday, May 2, 2011

CLASS SCENE

YOUTUBE ல் தேக்கிய என்னுடைய இரண்டாவது காணொளி . ULTIMATE CLASS scene by பாக்யராஜ்.




YOUTUBE ல் தேக்கிய என்னுடைய முதல் காணொளி .

YOUTUBE ல் தேக்கிய என்னுடைய முதல் காணொளி . ராமராஜன் படத்தில் ஜேர்மன் பாடல் - வியப்பாக இல்லை

நம்பாவிட்டால் தலைப்பிற்கு கீழே yourssaths என்று இருக்கும் பாருங்கள்.



Sunday, May 1, 2011

எனக்கு பிடித்த ஜப்பானிய பாடல்



உடதா ஹிகருவின் அழகு குரலில் ஜப்பானிய மொழிப் பாடல். கற்றுக் கொள்ள ஆசையாக உள்ளது.


எனக்கு பிடித்த அராபிய பாடல்


தோமர் ஹோசினியின் இந்த பாடல் அற்புதமான மெலடி. இவரின் AINS SHAMS பாடலும் நன்றாக இருக்கும். அராபிய பாடல்களை கேட்கும்போது தமிழ் பாடல்கள் நிறைய இங்கிருந்து எடுத்திருப்பது தெரியும்.


எனக்கு பிடித்த இளையராஜா பாடல்



சொல்வதற்கு எதுவும் இல்லை. மாஸ்டர் பீஸ்.



எனக்கு பிடித்த இளையராஜா பாடல்


சொல்வதற்கு எதுவும் இல்லை. மாஸ்டர் பீஸ்.




எனக்கு பிடித்த யுவன் பாடல்



யுவனின் இசைஅமைப்பில் வந்த பாடல்களில் எனக்கு மிகவும் பிடித்த பாடல். பின்புலத்திற்கு ஏற்ப உடைகள் மாறுவது அழகு.



எனக்கு பிடித்த மலையாள பாடல்

புதிய முகம் படத்தில் வரும் இந்த பாடல் மலையாள கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது. இசை தீபக் தேவ்.


எனக்கு பிடித்த தெலுகு பாடல்

கீரவாணியின் இசையில் ஒக்கரிக்கு ஒக்கரு என்ற படத்தில் வரும் இந்த பாடல் எனக்கு மிகவும் பிடித்தது. கேரளா அதிரம்பள்ளி அருவி வேறு அழகிற்கு அழகு சேர்க்கிறது.

எனக்கு பிடித்த கன்னட பாடல்

யஷ்வந்த் படத்தில் வரும் இந்த பாடல் ஏனோ எனக்கு பிடிக்கும். மணிஷர்மாவின் இசை , முரளி மற்றும் ரக்ஷிதா வின் ஆட்டம் மற்றும் பின்னால் வரும் நடன கலைஞர்கள் அனைத்தும் கவரும் விதத்தில் இருக்கும்.