Saturday, April 30, 2011

எனக்கு பிடித்த பிரெஞ்சு பாடல்

ஒரு விசேடமான காரணம் இல்லை. அலிழீ யின் உருகும் குரல் மட்டுமே.


எனக்கு பிடித்த ஆங்கிலப் பாடல்

இந்த பாடல் வன்முறையில் சுட்டுக் கொல்லப்பட்ட இரு குழந்தைகள் நினைவாக எழுதப்பட்டதாகும். அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து நாடுகளுக்கு இடையே உள்ள போரினை பற்றி சொல்வதாகும். உயிரை உலுக்கும் இந்த பாடலை எனக்கு மிக மிக பிடித்த டோலோறேஸ் ஒ ரயொர்டன் பாடி இருப்பார். என்னுடைய ALL TIME FAVOURITE SONG இது.
இவரது will you remember , cordell பாடல்களும் மிக அற்புதமாக இருக்கும் .


எனக்கு பிடித்த ஹிந்தி பாடல்நான் 1991ல் திண்டுக்கலில் என் சித்தியின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் தொலைக்காட்சியில் சித்ரஹார் நிகழ்ச்சியில் இந்த பாடலைப் பார்த்தேன். மிகவும் பிடித்து சைக்கிளை மிதித்து அருகில் இருக்கும் காசெட் கடையில் போய் வாங்கினேன் . பிறகு தொலைந்து போனது. பின்னர் இந்திய சுற்றுலா செல்லும் போது டெல்லியில் திரும்பவும் காசெட் வாங்கினேன். அதுவும் சில வருடங்களில் தொலைந்து போனது. இப்போது youtube ல் எடுத்து விட்டேன். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் என்னோடு பயணித்த இந்த பாடல் என்னால் மறக்க முடியாதது.


Sunday, April 24, 2011

பேரைக் கேட்டாலே தெரிஞ்சிடும்ல

என்னுடைய வட இந்திய நண்பன் தென் இந்தியரை " மதறாசி " என்பான். அவனைப் பார்த்து நான் தமிழ். இவன் தெலுகு , கன்னட, மலையாளம் என மொழியால் வேறு வேறானவர்கள். இது கூட தெரியாமல் இருக்கிறாயே என்றேன். உடனே அவன் என்னைப் பார்த்து " சோப்ரா" எந்த மாநிலத்தைச் சேர்ந்தவன் என்று தெரியுமா ? என்று கேட்டான். உடனே நான் " தெரியாது" என்றேன். உடனே அவன் முதலில் நீ எங்களை தெரிந்துக் கொள். அப்புறம் நான் உங்களைத் தெரிந்துக் கொள்கிறேன் என்றான். உடனே ஆராய ஆரம்பித்து இந்த தொகுப்பை வெளியிடுகிறேன் . இனிமேல் வட மாநிலத்தார் பெயரை வைத்து நீங்களும் அவர் எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதை ஓரளவு தெரிந்துக் கொள்ளுங்கள்.

பஞ்சாப்

சோப்ரா / சாவ்லா / கவுர் / பாட்டியா (சிந்தி) / கபூர் / கன்னா / மெஹ்ரா / டாண்டன் / மல்ஹோத்ரா / சேத்

பெங்கால்

மசும்தார் / ஹல்தர் / சர்க்கார் / பானர்ஜி / சட்டர்ஜி / கங்குலி / சென் / பட்டச்சார்யா / சாஹா / ராய் / பர்மன் / முகோபாத்யாயா / சக்ரவர்த்தி / பாசு / மித்ரா / முகர்ஜி / தத்தா / கோஷ்

ஒரிசா

நாயக் / மொஹந்தி / பண்டா / சாஹு / ஓஜா

ராஜஸ்தான்

அகர்வால் / ஜெயின் / ஜெய்ஸ்வால் / மிட்டல் / கோயல் / பண்டாரி / ஜிண்டால் / சவ்ஹான் / ரதோட் / ஷெகாவத்

குஜராத்

படேல் / மோடி / ஷா / திரிவேதி / காந்தி / மேத்தா / சோலங்கி

மகாராஷ்டிரா

தேஷ்பாண்டே / பாடீல் / சவான் / தவான் / பவார் / குல்கர்னி / ஷிண்டே / கர் மற்றும் லே , ரே யில் மிடியும் பல பெயர்கள் ( டெண்டுல்கர் , போன்ஸ்லே, மோரே போல )

ஹிந்தி ( உபி , பீகார் , ஹரியானா )

மிஸ்ரா / ஷர்மா / வர்மா / குப்தா / ஜாதவ் / சின்ஹா / சக்ஸ்சேனா / ஜா / பாஜ்பாய் / திவாரி / சுக்லா / சதுர்வேதி / பன்சால் / ஜோஷி


மங்களூர்

பட் / ஷெட்டி / ரய்