நான் 1991ல் திண்டுக்கலில் என் சித்தியின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள் தொலைக்காட்சியில் சித்ரஹார் நிகழ்ச்சியில் இந்த பாடலைப் பார்த்தேன். மிகவும் பிடித்து சைக்கிளை மிதித்து அருகில் இருக்கும் காசெட் கடையில் போய் வாங்கினேன் . பிறகு தொலைந்து போனது. பின்னர் இந்திய சுற்றுலா செல்லும் போது டெல்லியில் திரும்பவும் காசெட் வாங்கினேன். அதுவும் சில வருடங்களில் தொலைந்து போனது. இப்போது youtube ல் எடுத்து விட்டேன். கிட்டத்தட்ட இருபது வருடங்கள் என்னோடு பயணித்த இந்த பாடல் என்னால் மறக்க முடியாதது.
No comments:
Post a Comment