Monday, March 21, 2011


குஜராத் கலவரம் என்றான்
இங்கு போராட்டம் நடத்தினேன்
மகாராஷ்டிரா பூகம்பம் என்றான்
இங்கு நிதி திரட்டி அனுப்பினேன்
ஒரிசா வெள்ளம் என்றான்
இங்கு உணவுப்பொட்டலங்கள் தயார் செய்து வாரி வழங்கினேன்
இங்கு மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறார்கள் என்றேன்
அங்கு ஒரு சலனம் கூட இல்லையே ?
இதுதான்
ஒற்றுமையில் வேற்றுமையோ ?

------------------------------------------------------------------------------------------

பெட்டிக்கடையின் வெளியில்
பற்ற வைத்துக் கொண்டிருந்தேன் வென்குழலை
வேகமாக வந்தார் அந்த முதியவர் -
" ஒரு ரூபா கொடு " - கெஞ்சாமல்
கூழைக் கும்பிடு போடாமல்
உரிமையோடு கேட்டு கை நீட்டினார் .
இதற்கு முன் அவரைப் பார்த்ததில்லை
இனி பார்ப்பேனா என்று தெரியவில்லை
ஒன்றும் பேசாமல் ஒரு ரூபாயை
எடுத்துக் கொடுத்தேன் .
ஒரு வேளை கனவில் கடன் வாங்கி இருப்பேனோ ?

------------------------------------------------------------------------------------------

மனைவியிடம் " இன்னும் குழந்தையாகவே இருக்கிறாய் " என்று கோபத்துடன் கத்தினேன்.
" அதில் தவறு ஏதும் இருக்கிறதா? " என்று கேட்டாள்.
யோசிக்கிறேன்.

------------------------------------------------------------------------------------------

வெற்றி பெறும்போது
என்னை விட
என் மகன்
அதிகம் மகிழ்ச்சி அடைகிறான்.
தோல்வி அடையும்போது
என்னை அவன்
தேற்றுகிறான்.
புரியவில்லை
யாருக்கு யார் அப்பா என்று ?

No comments:

Post a Comment